மே மாத ராசி பலன்கள் 2024 - மிதுனம்

மே மாத ராசி பலன்கள் 2024 - மிதுனம்

விடாமுயற்சியுடன் செயலில் ஈடுபடும் மிதுன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு விரைய குருவாக அமைவது அடிக்கடி புதிய செலவுகள் உண்டாகும். செலவு செய்வதற்கு முன் காரண காரியங்களை அறிந்து, தன் பின்னர் செலவழிக்கவேண்டும். வீடு கட்டுதல், காலி மனை வாங்குதல் போன்ற சுபகாரியங்களுக்கு செலவு செய்வதன் மூலம் உங்களுக்கு தேவையற்ற செலவைத் தவிர்க்கலாம்.
 
உங்களின் யோகாதிபதி சனி லாபஸ்தானத்தை பார்ப்பதால் நல்ல காரியம் செய்ய தொழிலிலும், உத்தியோகத்திலும் மேன்மை அடைவீர்கள். உங்களின் தொழில் ஸ்தானத்தில் ராசிநாதனுடன் லாபாதிபதி இணைவு பெறுவதும் போட்டிகள் இருந்தாலும் உங்களுக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
 
அரசியலில் சிறந்த ஆலோசகராக இருப்பீர்கள். பொது விடயங்களில் முன்பு இருந்த ஆர்வம் குறையும். நீண்ட நாட்கள் தடைபட்ட காரியத்தில், தற்போது தடை நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். எதற்கு தயங்காமல் உங்களின் செயல்களை செய்து வருவீர்கள். எங்கு பயணம் சென்றாலும் முன்னெச்சரிக்கையாக சில காரியத்தைத் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டும், ஆலோசனைகளைப் பெற்றும் செயல்படுவீர்கள். 
 
புதிய திட்டங்களை சில காலம் கழித்து செய்வது நல்லது. விளையாட்டு துறையில் முன்னேற்றம் காண்பீர்கள். சகோதரரின் மூலம் சிலருக்கு ஆதாயம் உண்டாகும். தொழில் சார்ந்த வெளியூர் பயணம்... நற்பலனைப் பெற்று தரும். ஆதாயம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டீர்கள். 
 
குடும்ப பாரம் சற்று இறங்கும். சூழ்நிலைகளால் சில நேரம் எதிர்பாராத மகிழ்ச்சியும் உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு பாராட்டுகளும், பரிசும் கிடைக்கும். பண புழக்கம் சீராக இருக்கும். 
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
27-05-2024 திங்கள் மாலை 04.23 மணி முதல் 29.05.2024 புதன் இரவு 07.52 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
பச்சை, நிலம், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
புதன், வெள்ளி, சனி.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை ராகு காலத்தில் 09 - 10.30 நவகிரக வழிபாடும், அரளி பூ சிவப்பு நிற பூ மாலை சூரியன், செவ்வாய்க்கு போட்டு வழிபட்டு வர, தொழிலில் முன்னேற்றமும். பொருளாதார மேன்மையும் உண்டாகும்.